செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி - வெற்றியுடன் தொடங்கினார் பி.வி.சிந்து

Published On 2018-08-20 04:00 GMT   |   Update On 2018-08-20 04:00 GMT
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தினார். #AsiansGames2018 #PVSindhu
ஜகார்த்தா:

இந்தோனேசியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், பேட்மிண்டன் மகளிர் அணிகளுக்கான காலிறுதி ஆட்டத்தில் இந்தியா-ஜப்பான் அணிகள் விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமசுச்சியை எதிர்கொண்டார்.

பரபரப்பான இப்போட்டியில் பி.வி. சிந்து 21-18, 21-19 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரட்டையர் பிரிவு ஆட்டம் நடைபெற்றது.



இதேபோல் நீச்சல் பிரிவில் இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ், 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் 26.10 வினாடிகளில் இலக்கை எட்டி தேசிய சாதனையை முறியடித்தார். இவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 800 மீட்டர் பிரீஸ்டைல் பிரிவில் அத்வைத் பேஜ் முதல் சுற்றில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.  ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் ரவி குமார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.  #AsiansGames2018 #PVSindhu

Tags:    

Similar News