செய்திகள்

டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட்- சதமடித்து ஆண்டர்சன் 2-வது இடம்

Published On 2018-08-19 10:21 GMT   |   Update On 2018-08-19 10:21 GMT
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவிற்கு எதிராக ஹர்திக் பாண்டியா விக்கெட் உடன் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரராகியுள்ளார் ஆண்டர்சன். #ENGvIND #Anderson
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நேற்று தொடங்கியது. ஸ்விங் பந்து வீச்சுக்கு மிகவும் சாதகமான ஆடுகளத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். ஆண்டர்சன் இந்திய வீரர்களை அச்சுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொடக்கத்தில் 7 ஓவர்கள் தொடர்ச்சியாக வீசினாலும் தவான் மற்றும் கேஎல் ராகுலை ஆண்டர்சனால் ஒன்னும் செய்ய இயலவில்லை. 21 ஓவர்கள் வீசிய ஆண்டர்சனால் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

ஆட்டத்தின் 87-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இது அவருக்கு 22-வது ஓவராகும். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவை வீழ்த்தினார். இந்த ஓவரோடு முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.



ஹர்திக் பாண்டியா விக்கெட் மூலம் இந்தியாவிற்கு எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு எதிராக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆவார்.

முத்தையா முரளீதரன் 105 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார். 94 விக்கெட்டுக்களுடன் இம்ரான் கான் 3-வது இடத்திலும், 76 விக்கெட்டுக்களுடன் மால்கம் மார்ஷல் 4-வது இடத்திலும், 67 விக்கெட்டுக்களுடன் ஆண்டி ராபட்ர்ஸ் 5-வது இடத்திலும் உள்ளனர்.
Tags:    

Similar News