செய்திகள்

ஆசிய விளையாட்டு - இந்திய பெண்கள் கபடி அணி வெற்றி

Published On 2018-08-19 05:40 GMT   |   Update On 2018-08-19 05:40 GMT
ஆசிய விளையாட்டு போட்டியில் ஜப்பானுக்கு எதிராக 43-12 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது. #AsianGames2018
ஜகார்தா:

18-வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேசியாவில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்தியா, சீனா, ஜப்பான், கொரியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 11,300 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர். 40 விளையாட்டுகளில் 465 பிரிவுகளில் பந்தயம் நடக்கிறது.

இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் ஆக மொத்தம் 570 பேர் பங்கேற்றுள்ளனர். 36 விளையாட்டுகளில் இந்தியா கலந்து கொள்கிறது. ஆசிய விளையாட்டில் இன்று முதல் போட்டிகள் தொடங்கியது.

கபடியில் இந்திய பெண்கள் அணி ஜப்பானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 43-12 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. அடுத்த ஆட்டத்தில் தாய்லாந்தை நாளை சந்திக்கிறது. 21-ந்தேதி இலங்கை மற்றும் இந்தோனேசியாவுடன் மோதுகிறது.

ஆண்கள் பிரிவில் இந்திய அணி இன்று பிற்பகல் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது. மாலையில் இலங்கையுடனும், 20-ந்தேதி தென்கொரியாவுடனும், 21-ந்தேதி தாய்லாந்துடனும் மோதுகிறது.

கபடி போட்டியை பொறுத்தவரை இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்கள் பிரிவில் 7 தங்கமும், பெண்கள் பிரிவில் 2 தங்கமும் வென்றுள்ளது.

பெண்கள் கபடியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஈரான் 46-20 என்ற புள்ளி கணக்கில் கொரியாவை தோற்கடித்தது. #AsianGames2018
Tags:    

Similar News