செய்திகள்

அடிதடி வழக்கில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை- பிரிஸ்டோல் கோர்ட்

Published On 2018-08-14 16:07 GMT   |   Update On 2018-08-14 16:07 GMT
பிரிஸ்டோல் இரவு விடுதி முன் நடைபெற்ற அடிதடி வழக்கில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை என கோர்ட் தெரிவித்துள்ளது. #BenStokes
வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் மாதம் 25-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு பென் ஸ்டோக்ஸ் தனது சக வீரர் ஹேல்ஸ் உடன் இரவு விடுதிக்கு சென்றார்.

பின்னர் நள்ளிரவு திரும்பும் வேளையில் விடுதி முன்பு வாலிபர்களுடன் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் பேன் ஸ்டோக்ஸை கைது செய்து பின்னர் விடுவித்தனர். அந்த வாலிபர், பென் ஸ்டோக்ஸ் தாக்கியதால் முகத்தில் காயம் ஏற்பட்டதாக புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து பிரிஸ்டோல் கிரவுன் நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. இதனால் அவர் ஆஷஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது இந்தியாவிற்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் விளையாடினார்.



அந்த அடிதடி வழக்கு தற்போது விசாரணைக்கு வந்தது. இதனால் லார்ட்ஸ் டெஸ்டில் அவர் விளையாடவில்லை. அந்த நேரத்தில் கோர்ட்டில் ஆஜராகி வாதத்தை முன்வைத்தார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கில் பென் ஸ்டோக்ஸ் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வழங்கினார்.

இதனால் பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பதில் எந்தவொரு பிரச்சினையும் இருக்காது.
Tags:    

Similar News