செய்திகள்

12-வது முறையாக மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்று லீ சாதனை

Published On 2018-07-01 12:43 GMT   |   Update On 2018-07-01 12:43 GMT
35 வயதான லீ சாங் வெய் 12 முறையாக மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரை வென்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். #MalyasianOpen
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 35 வயதான மலேசியாவின் லீ சாங் வெய், 23 வயது இளம் வீரரான கென்டோ மொமோட்டாவை எதிர்கொண்டார். இதில் சொந்த ஊரில் விளையாடிய அனுபவ வீரரான லீ சாங் வெய் 21-17, 23-21 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 12 முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் தொடர் அரையிறுதிப் போட்டியில் மொமோட்டா லீயை வீழ்த்தியிருந்தார். அதற்கு தற்போது லீ பதிலடி கொடுத்துள்ளார்.



பெண்களுக்கான இறுதிப் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான தாய் சு யிங் சீனாவின் ஹி பிங்ஜியாவோவை 22-20, 21-11 என நேர்செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
Tags:    

Similar News