செய்திகள்

ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார் கேப்டன் கூல்

Published On 2018-05-20 20:13 GMT   |   Update On 2018-05-20 20:13 GMT
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். #VIVOIPL #IPL2018 #MSDhoni

புனே:

ஐபிஎல் தொடரின் 56-வது மற்றும் கடைசி லீக் புனேயில உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணி 19.1 ஒவரில் 159 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் டோனி ஆட்டமிழக்காமல் 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவர் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியில் 9 ரன்கள் எடுத்த போழுது ஐபிஎல் போட்டிகளில் ஒரு புதிய மைல் கல்லை கடந்தார் டோனி.



இதுவரை 173 போட்டிகளில் விளையாடி 157 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள டோனி, 2,888 பந்துகளில் 4007 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 20 அரைசதங்கள், 274 பவுண்டரிகள் மற்றும் 186 சிக்ஸர்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 79* ஆகும். இதில் சென்னை அணிக்காக 3,433 ரன்களும், புனே அணிக்காக 574 ரன்களும் எடுத்துள்ளார். கேப்டனாக 3,717 ரன்கள் எடுத்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 7-வது வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். டோனியை தவிர, விராட் கோலி (4948), சுரேஷ் ரெய்னா (4931), ரோகித் சர்மா (4493), கவுதம் காம்பீர் (4217), ராபின் உத்தப்பா (4081), டேவிட் வார்னர் (4014) ஆகியோரும் 4000 ரன்களை கடந்துள்ளனர். #VIVOIPL #IPL2018 #MSDhoni
Tags:    

Similar News