செய்திகள்

அடிலெய்டு டெஸ்ட் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும்- ஆஸ்திரேலியா உறுதி

Published On 2018-05-08 09:00 GMT   |   Update On 2018-05-08 09:00 GMT
இந்தியாவிற்கு எதிரனா அடிலெய்டு டெஸ்ட் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. #AUSvIND
இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 3-வது டெஸ்ட் அடிலெய்டில் டிசம்பர் 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. ஆஸ்திரேலியா சில வருடங்களாக அடிலெய்டில் நடைபெறும் டெஸ்டை பகல்-இரவு டெஸ்டாக பிங்க் பந்தில் நடத்தி வருகிறது. முதன்முறையாக ஆஸ்திரேலியா நியூசிலாந்துக்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது.

அதன்பின் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக பிங்க் பந்தில் பகல்-இரவு டெஸ்ட் ஆக விளையாடியது. இதற்கு ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்ததால், இந்தியாவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது.



ஆனால், இந்திய அணி பிங்க் பந்தில் போதுமான அளவு பயிற்சி பெறவில்லை. இதனால் பகல்-இரவு போட்டியில் விளையாட இயலாது என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிற்கு கடிதம் எழுதியது.

இந்நிலையில் அடிலெய்டு டெஸ்ட் வழக்கமான நடைமுறைபோல் பகல் டெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பகல்-இரவு டெஸ்டில் விளையாடவில்லை.
Tags:    

Similar News