செய்திகள்

ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் - இந்திய வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா வெள்ளி வென்றார்

Published On 2018-04-25 09:48 GMT   |   Update On 2018-04-25 09:48 GMT
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா வெள்ளிப்பதக்கம் வென்றார். #JeremyLalrinnunga #WeightliftingChampionship #SidhantGogoi

புதுடெல்லி:

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஜெர்மி லால்ரின்னுங்கா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஜூனியர் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் உஸ்பெகிஸ்தானின் உர்கெஞ்ச் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சிறுவர்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவு போட்டியில் இந்தியா சார்பில் 15 வயதாகும் ஜெர்மி லால்ரின்னுங்கா கலந்துகொண்டார். 

இப்போட்டியில், அவர் மொத்தமாக 250 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம் அவர் இரண்டு தேசிய சாதனைகளை முறியடித்தார். இதே பிரிவின் வெண்கலப்பதக்கத்தை மற்றொரு இந்திய வீரரான சித்தாந்த் கோகோய் தட்டிச்சென்றார். இவர்கள் இருவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

முன்னதாக நடைபெற்ற ஜூனியர் பெண்களுக்கான பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் ஜில்லி டாலாபெஹெரா வெள்ளிப்பதக்கம் வென்றார். அவர் மொத்தம் 166 கிலோ எடையை தூக்கினார். இப்போட்டியின் வெண்கலப்பதக்கத்தை ஸ்னேகா சோரென் தட்டிச்சென்றார். அவர் மொத்தம் 145 கிலோ எடையை தூக்கினார். இவர்கள் இருவரும் ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.  #JeremyLalrinnunga #WeightliftingChampionship #SidhantGogoi
Tags:    

Similar News