செய்திகள்

ஒரு பந்துக்கு 5.1 ரன்கள்- 20 பந்தில் சதமடித்து சஹா உலக சாதனை

Published On 2018-03-24 12:57 GMT   |   Update On 2018-03-24 12:57 GMT
இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் சஹா 20 பந்தில் சதம் அடித்து உலக சாதனைப் படைத்துள்ளார். இதில் 16 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். #IPL2018
மேற்கு வங்காள மாநிலத்தில் ஜேசி முகர்ஜி டிராபி டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலிகட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் - மோகுன் பகன் அணிகள் மோதின.

முதலில் களம் இறங்கிய பெங்கால் நாக்பூர் ரெயில்வேஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. பின்னர் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மோகுன் பகன் அணியின் விருத்திமான் சஹா, சுபோமோய் தாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சஹா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் மோகுன் பகன் அணி 7 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 154 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.



சஹா 20 பந்துகளை சந்தித்து 14 சிக்ஸ், 4 பவுண்டரியுடன் 102 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். சிக்சர் மூலம் 84 ரன்களும், பவுண்டரி மூலம் 16 ரன்களும், இரண்டு ஒரு ரன்கள் மூலமாக இந்த சாதனையை எட்டியுள்ளார். ஸ்டிரைக் ரேட் 510 ஆகும். 12 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்த சஹா, அடுத்த 8 பந்தில் 102 ரன்னை தொட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி சஹாவை 5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு குறுகிய காலமே உள்ள நிலையில், இந்த சாதனை சஹாவிற்கு நம்பிக்கையூட்டிள்ளது.
Tags:    

Similar News