செய்திகள்

உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2018-03-19 17:22 GMT   |   Update On 2018-03-19 17:22 GMT
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்றின் ஜிம்பாப்வே அணியுடனான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ICCWCQ #WIvZIM
ஹராரே:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. இதில் ஹராரேவில் இன்று நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டத்தில் இம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்கள் முடிவில் 289 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. பிரண்டன் டெய்லர் (138 ரன்) சதம் அடித்தார். சாலோமன் மிரே 45 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 34 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்களும், கெமார் ரோச் 3 விக்கெட்களும், கீமோ பால் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.



தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் மார்லன் சாமுவேல்ஸ் 86 ரன்களும், ஷாய் ஹோப் 76 ரன்களும், எவின் லெவிஸ் 64 ரன்களும் எடுத்தனர். ஜிம்பாப்வே அணி பந்துவீச்சில் பிளெஸ்சிங் முசாரபானி, கிரேம் கிரீமர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மார்லன் சாமுவேல்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சூப்பர் சிக்ஸ் சுற்றில் நாளை நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்கிறது. #ICCWCQ #WIvZIM
Tags:    

Similar News