செய்திகள்

தென் ஆப்பிரிக்க தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ்

Published On 2018-02-17 07:13 GMT   |   Update On 2018-02-17 07:13 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தைப் பிடித்தார்.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக விராட் கோலியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவர் 6 ஆட்டத்தில் விளையாடி 558 ரன் குவித்தார்.

கோலிக்கு அடுத்தபடியாக தவான் 323 ரன் எடுத்து 2-வது இடத்தை பிடித்தார். இதில் 1 சதமும், 2 அரை சதமும் அடங்கும். சராசரி 64.60 ஆகும். ரோகித்சர்மா 1 சதத்துடன் 170 ரன்னும், ஹசிம் அம்லா 154 ரன்னும் எடுத்தனர்.

பந்துவீச்சைப் பொருத்தவரை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 17 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார். 23 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சு ஆகும். யசுவேந்திர சாஹல் 16 விக்கெட் வீழ்த்தினார். 22 ரன் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.



இந்திய சுழற்பந்து வீரர்கள் இருவரும் இணைந்து 33 விக்கெட் வீழ்த்தி உள்ளனர்.

பும்ரா, தென்ஆப்பிரிக்கா வீரர் நிகிடி தலா 8 விக்கெட் கைப்பற்றி அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.
Tags:    

Similar News