செய்திகள்

சாம்பியன்ஸ் லீக்கில் ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மாட்ரிட் வெற்றி

Published On 2018-02-15 09:44 GMT   |   Update On 2018-02-15 09:44 GMT
சாம்பியன்ஸ் லீக் தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் லெக்கில் ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன. #UCL #RealMadrid #PSG
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின் முதல் லெக் நடைபெற்று வருகிறது. ஒரு போட்டியில் யுவான்டஸ் - டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணிகள் மோதின. பலமான யுவான்டஸ் அணிக்கு டோட்டன்ஹாம் இணையாக விளையாடியது. இந்த ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. யுவான்டஸ் அணியின் முன்னணி வீரர் ஹிகுவைன் 2-வது நிமிடத்தில் ஒரு கோலும், 9-வது நிமிடத்தில் பெனால்டி மூலம் ஒரு கோலும் அடித்தார். டோட்டன்ஹாம் அணி சார்பில் ஹாரி கேன் 35-வது நிமிடத்திலும், கிறிஸ்டியன் எரிக்சன் 71-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.



மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - எப்சி பாசெல் அணிகள் மோதின. இதில் மான்செஸ்டர் சிட்டி குண்டோகன் 14-வது நிமிடத்திலும், 53-வது நிமிடத்திலும், பெர்னாடோ சில்வா 18-வது நிமிடத்திலும், செர்ஜியோ அக்யூரோ 23-வது நிமிடத்திலும் கோல் அடிக்க 4-0 என மான்செஸ்டர் சிட்டி அசத்தல் வெற்றி பெற்றது.



மாற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் - போர்ட்டோ அணிகள் மோதின. இதில் லிவர்பூல் 5-0 என வெற்றி பெற்றது. சாடியோ மானே 25, 53 மற்றும் 85-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோல் அடித்தார். மொகமது சாலா 29-வது நிமிடத்திலும், ரொபர்ட்டோ பிர்மினோ 69 நிமிடத்திலும் கோல் அடித்தனர்.



நான்காவது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் - பாரிஸ் ஜெயின்ட் ஜெர்மைன் அணிகள் பலப்பரீ்ட்சை நடத்தின. இந்த ஆட்டம் ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கியது முதல் ரியல் மாட்ரிட் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, பென்சிமா, இஸ்கோ ஆகியோர் அடிக்கடி எதிரணி கோல் எல்லையை நோக்கி படையெடுத்தனர். ஆனால் ஒன்றைக்கூட கோலாக மாற்ற முடியவில்லை. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிஎஸ்ஜி அணியும் விளையாடியது.



ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் அடிரியன் ரபியோட் முதல் கோலை பதிவு செய்தார். 45-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி ரொனால்டோ கோல் அடித்தார்.

பின்னர் 2-வது பாதி நேரத்தில் நீண்ட நேரம் கோல் விழவில்லை. கடைசி 10 நிமிடத்தில் ஆட்டம் ரியல் மாட்ரிட் அணிக்கு சாதகமாக அமைந்தது. 83-வது நிமிடத்தில் ரொனால்டோவும், 86-வது நிமிடத்தில் மார்சிலோவும் கோல் அடிக்க ரியல் மாட்ரிட் 3-1 என வெற்றி பெற்றது. #UCL #RealMadrid #PSG #Juventus #liverpool #Tottenhams
Tags:    

Similar News