செய்திகள்

காலை செசனில் 3 விக்கெட்டை இழந்தது தென்ஆப்பிரிக்கா: 173-5, 201 ரன் முன்னிலை

Published On 2018-01-16 10:44 GMT   |   Update On 2018-01-16 10:44 GMT
செஞ்சூரியன் டெஸ்டில் இன்றைய 4-வதுநாள் முதல் செசனில் தென்ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #SAvIND #INDvSA
இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 50 ரன்னுடனும், டீன் எல்கர் 36 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். டீன் எல்கர் அரைசதம் அடித்தார். டி வில்லியர்ஸ் 80 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார். டீன் எல்கர் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். டி காக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் மொகமது ஷமி வீழ்த்தினார்.

5-வது விக்கெட்டுக்கு டு பிளிசிஸ் உடன் பிலாண்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



தென்ஆப்பிரிக்கா அணி 55 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்துள்ளது. டு பிளிசிஸ் 12 ரன்னுடனும், பிலாண்டர் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை தென்ஆப்பிரிக்கா 201 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. #SAvIND #INDvSA #mohammedShami
Tags:    

Similar News