செய்திகள்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 6-வது வெற்றி பெறுமா? புனேவுடன் நாளை மோதல்

Published On 2018-01-12 09:03 GMT   |   Update On 2018-01-12 09:03 GMT
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை நடக்கவுள்ள கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. - புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.
சென்னை:

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடந்து வருகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை இரவு நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.- புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

சென்னை அணி 9 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்றுள்ளது. 2 தோல்வி, 2 டிராவுடன் 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி 6-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

புனே அணியும் 9 ஆட்டத்தில் 5 வெற்றி பெற்று இருக்கிறது. ஒரு டிரா, 3 தோல்வி அடைந்து இருக்கிறது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கவுகாத்தியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் கவுகாத்தி- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News