செய்திகள்

ஆஷஸ்: இங்கிலாந்துக்கு மேலும் பின்னடைவு; ஜேக் பால் காயத்தால் அவதி

Published On 2017-11-09 14:52 GMT   |   Update On 2017-11-09 14:53 GMT
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் காயத்தால் ஆஷஸ் தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது ஜேக் பால் காயமடைந்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

முதல் பயிற்சி ஆட்டத்திற்காக பயிற்சி செய்தபோது வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஃபின் காயம் அடைந்தார். காயத்தின் தன்மை அதிகமாக இருந்ததால் ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். மொயீன் அலி காயத்தால் அவதிப்பட்டு வந்தார்.



இந்நிலையில் இங்கிலாந்து அணி கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான அடிலெய்டில் பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் மோதி வருகிறது.

இந்த போட்டியின்போது பந்து வீசியபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக் பாலுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News