செய்திகள்

ஆப்கானிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளராக டீன் ஜோன்ஸ் நியமனம்

Published On 2017-10-10 10:15 GMT   |   Update On 2017-10-10 10:15 GMT
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போதைய பிரபலமான வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் ஆப்கானிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். ஐ.பி.எல்., தமிழ்நாடு பிரிமீயர் லீக்கில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு இந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர்.

இவர் தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாத இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி ஹாங்காங்கில் சர்வதேச கோப்பைக்கான தொடரில் விளையாட இருக்கிறது. இதற்காக இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.



ஆப்கானிஸ்தான் அணி கடந்த ஜூன் மாதம் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒப்பதல் வழங்கியது. இதன்மூலம் இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 12 அணிகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் இடம்பிடித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்தியாவின் லால்சந்த் ராஜ்புட் இருந்து வந்தார். இவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை. இதனால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பயிற்சியாளர் இல்லாமல் ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
Tags:    

Similar News