செய்திகள்

டென்னிஸ் தரவரிசை: முதன்முறையாக முதல் இடத்தை பிடித்தார் சிமோனா ஹாலெப்

Published On 2017-10-07 11:40 GMT   |   Update On 2017-10-07 11:40 GMT
ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் உலக டென்னிஸ் தரவரிசையில் முதன்முறையாக முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
சீனாவின் பீஜிங் நகரில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான அரையிறுதி ஒன்றில் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப், லாத்வியாவின் ஜெலினா ஓஸ்டாபென்கோவை எதிர்கொண்டார். இதில் ஹாலெப் 6-2, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.



இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு நுழைந்த ஹாலெப், முதன்முறையாக உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்து முகுருசா 2-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். அடுத்த வாரம் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ பட்டியலில் இந்த மாற்றம் ஏற்பட இருக்கிறது.
Tags:    

Similar News