செய்திகள்

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது

Published On 2017-09-20 02:49 GMT   |   Update On 2017-09-20 02:49 GMT
சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரைத் தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறும் சினிமா படமாகிறது.
கொல்கத்தா:

சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரைத் தொடர்ந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாறும் சினிமா படமாகிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த 34 வயதான ஜூலன் கோஸ்வாமி பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (164 ஆட்டத்தில் 195 விக்கெட்) வீழ்த்திய சாதனையாளர் ஆவார்.

சுசந்தா தாஸ் இயக்கும் இந்த படம் இந்தி மொழியில் தயாராகிறது. அவரது சொந்த ஊரான சக்தஹாவில் இருந்து உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடிய லண்டன் லார்ட்ஸ் வரை படப்பிடிப்பு நடக்கிறது. ஜூலன் கோஸ்வாமி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், படப்பிடிப்பை அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இயக்குனர் சுசந்தா தாஸ் கூறினார்.
Tags:    

Similar News