செய்திகள்

ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து: போட்டியை நடத்தும் கொல்கத்தா லோகோவை வெளியிட்டார் மம்தா பானர்ஜி

Published On 2017-08-23 14:56 GMT   |   Update On 2017-08-23 14:56 GMT
ஜூனியர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் கொல்கத்தா நகர லோகோவை முதல் மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டார்.
கொல்கத்தா:

இந்தியாவில் வரும் அக்டோபர் 6-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா மற்றும் கொச்சி, டெல்லி, நவி மும்பை, கவுகாத்தி, மார்கோவா ஆகிய இடங்களில் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இறுதிப்போட்டி உள்ளிட்ட 10 போட்டிகள் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், போட்டி நடைபெறும் கொல்கத்தா நகர லோகோவை மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். அதில், மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் போட்டி சின்னம் இடம்பெற்றுள்ளது. இந்த லோகோவானது, போட்டியை நடத்தும் நகரை பற்றிய விளம்பரங்கள் மற்றும் தகவல் தொடர்புகளில் முக்கிய இணைப்பை உருவாக்கும்.

லோகோ அறிமுக நிகழ்ச்சியில் பிபா உலகக் கோப்பை உள்ளூர் ஒருங்கிணைப்புக்குழு திட்ட இயக்குனர் ஜாய் பட்டாச்சார்யா, போட்டி இயக்குனர் ஜேபியர் செப்பி, மாநில விளையாட்டுத்துறை மந்திரி அரூப் பிஸ்வாஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News