செய்திகள்

வாஷிங்டன் சுந்தர் 459 ரன் குவித்தார்: 17 விக்கெட் கைப்பற்றி சாய்கிஷோர் முதலிடம்

Published On 2017-08-21 06:11 GMT   |   Update On 2017-08-21 06:11 GMT
தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில் இந்த ஆண்டில் அதிக விக்கெட், அதிக ரன்கள், எடுத்த வீரர்கள் விபரம் பற்றிய செய்தியை விரிவாக பார்க்கலாம்.
சென்னை:

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர் சாய்கிஷோர் அதிக விக்கெட் கைப்பற்றினார்.

இடது கை சுழற்பந்து வீரரான அவர் 10 ஆட்டத்தில் விளையாடி 17 விக்கெட் கைப்பற்றினார்.

சாய்கிஷோர் 40 ஓவர் வீசி 228 ரன்கள் கொடுத்து இந்த விக்கெட்டை எடுத்தார். 13 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும். சராசரி 13.41 ஆகும். கடந்த சீசனில் அவர் 12 விக்கெட் கைப்பற்றி இருந்தார். டி.என்.பி.எல். போட்டியில் சாய்கிஷோர் ஒட்டு மொத்தமாக 29 விக்கெட் (19 ஆட்டம்) வீழ்த்தி உள்ளார்.

அவருக்கு அடுத்தப் படியாக வாஷிங்டன் சுந்தர், அதிசயராஜ் (தூத்துக்குடி) தலா 15 விக்கெட்டும், சிலம்பரசன் (திருவள்ளூர்) 12 விக்கெட்டும், மோகன பிரசாத் (காரைக்குடி காளை) 11 விக்கெட்டும் எடுத்தனர்.

ரன் குவிப்பில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் வீரர் வாஷிங்டன் சுந்தர் முதல் இடத்தை பிடித்தார். அவர் 9 ஆட்டத்தில் 459 ரன்கள் குவித்தார். சராசரி 76.50 ஆகும். அதிகபட்சமாக 107 ரன் எடுத்தார். ஒரு சதமும், 3 அரை சதமும் அடித்தார்.

கவுசிக் காந்தி 297 ரன் குவித்து 2-வது இடத்தையும், அனிருதா ஸ்ரீகாந்த் (காரைக்குடி காளை) 287 ரன் குவித்து 3-வது இடத்தையும், பாபா அபராஜித் (திருவள்ளூர் வீரன்ஸ்) 277 ரன்னுடன் 4-வது இடத்தையும், பரத் சங்கர் (ரூபி திருச்சி வாரியர்ஸ்) 265 ரன்னுடன் 5-வது இடத்தையும் பிடித்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் கோபிநாத் 251 ரன் எடுத்து 6-வது இடத்தை பிடித்தார்.

காரைக்குடி காளை வீரர் அனிருதா ஸ்ரீகாந்த் அதிக சிக்சர் அடித்துள்ளார். அவர் 6 ஆட்டத்தில் 18 சிக்சர் எடுத்தார்.

ஷாஜகான் (காரைக்குடி காளை), வாஷிங்டன் சுந்தர் தலா 17 சிக்சர்களும், அந்தோணி தாஸ் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்)15 சிக்சர்களும், பாபா அபராஜித் 14 சிக்சர்களும் அடித்துள்ளனர்.
Tags:    

Similar News