செய்திகள்

விளையாட்டு மைதான கட்டடத்தில் மின்கசிவு: மல்யுத்த வீரர் விஷால் குமார் பரிதாப மரணம்

Published On 2017-08-09 23:54 GMT   |   Update On 2017-08-10 03:44 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மைதான கட்டடத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தேசிய மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுடெல்லி:

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரில் உள்ள ஜெய்ப்பால் சிங் மைதானத்தில் தேசிய அளவிலான மல்யுத்த வீரர் விஷால் குமார் வர்மா பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று 25 வயதான விஷால் உணர்வற்ற நிலையில் மைதானத்தின் அலுவலகம் அருகில் மயங்கி கிடந்தார்.

பின்னர் அவரை உள்ளூர் மக்கள் அருகில் இருந்த மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மல்யுத்த வீரர் விஷால் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மழை காரணமாக மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அகற்றும் பணியில் விஷால் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது என்று ஜார்க்கண்ட் மல்யுத்த சங்கத்தின் தலைவர் போலா நாத் சிங் தெரிவித்தார். வீரர் விஷாலின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ஒரு லட்சம் ரூபாயை அவர் அறிவித்தார்.

மேலும், விஷாலின் குடும்பத்தில் உள்ள 4 தங்கைகளில் ஒரு தங்கைக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.10 ஆயிரம் சங்கம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

விபத்து நடைபெற்ற உள் விளையாட்டரங்கம் 1978-ம் ஆண்டில் கட்டப்பட்டது ஆகும். கட்டடங்கம் மிகவும் பழமையானவை. சமீப காலமாக பெய்த மழையால் கட்டடங்கள் தண்ணீரில் ஊறி இருந்தது. இதனால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Tags:    

Similar News