செய்திகள்

புரோ கபடிக்கு ரசிகர்கள் அபார வரவேற்பு: தொடக்க விழாவை 5 கோடி பேர் பார்த்து ரசித்தனர்

Published On 2017-08-04 11:38 GMT   |   Update On 2017-08-04 11:38 GMT
புரோ கபடிக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். 5-வது வருடத்தின் தொடக்க விழாவை 5 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதன்முறையாக ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனால் கபடி, கால்பந்து, பேட்மிண்டன் என பெரும்பாலானா விளையாட்டுகளில் லீக் தொடங்கப்பட்டது. புரோ கபடி கடந்த 2003-ம் ஆண்டு தொடங்கியது. இதற்கு ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு கிடைக்க, 5-வது சீசனான தற்போது நடைபெற்று வரும் தொடரில் புதிதாக நான்கு அணிகள் சேர்க்கப்பட்டது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.

கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய இந்த தொடர் அக்டோபர் 28-ந்தேதி வரை சுமார் 91 நாட்கள் நடைபெறுகின்றன. இதில் 138 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன.

இந்த வருடத்திற்கான தொடக்க விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவை 5 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர். கடந்த ஆண்டு தொடக்க விழாவை பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட இது 137 சதவீதம் அதிகமாகும். ஆந்திர பிரதேசத்தில் 48 சதவீதம் ரசிகர்களும், மகாராஷ்டிராவில் 22 சதவீதம் ரசிகர்களும் அதிகரித்துள்ளன.



கிரிக்கெட்டிற்கு அதிக அளவில் ரசிகர்களை கொண்ட இந்தியாவில், கபடிக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள பேராதரவு புரோ கபடி குழுவிற்கு பெரும் ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.

புரோ கபடியில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் போர்ட்சுன்ஜெயன்ட், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங் பந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு. மும்பா, உ.பி. யோதா ஆகிய 12  அணிகள் இடம்பிடித்துள்ளன.
Tags:    

Similar News