செய்திகள்

அமெரிக்க ஓபனில் ஜோகோவிச் விளையாடுவது சந்தேகம்

Published On 2017-07-25 11:12 GMT   |   Update On 2017-07-25 11:12 GMT
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அமெரிக்க ஓபனில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடருக்கு முன்புவரை டென்னிஸில் ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதன்பின் அவரது ஆட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டார். காலிறுதியில் போதும்போது அவரது வலது முழங்கையில் காயம் ஏற்பட்டது. தற்போது காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

முழங்கை காயம் முழுமையாக குணமடைய சுமார் 12 வாரங்கள் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் அமெரிக்க ஓபனில் ஜோகோவிக் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.



12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச் 2011 மற்றும் 2015-ல் அமெரிக்க ஓபனை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் ஆகஸ்ட் 28-ந்தேதி தொடங்குகிறது.

2005-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 51 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஜோகோவிச் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News