செய்திகள்

பயிற்சி ஆட்டம்: அபிநவ் ஏமாற்றம்; ராகுல், குல்தீப் யாதவ், ஜடேஜா ஜொலிப்பு

Published On 2017-07-21 15:10 GMT   |   Update On 2017-07-21 15:10 GMT
இலங்கை பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிழக வீரர் அபிநவ் முகுந்த் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணி இலங்கை பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிராக இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் மோதி வருகின்றது. இந்த ஆட்டம் இன்று தொடங்கியது.

முதலில் இலங்கை பிரசிடென்ட் லெவன் அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் குணதிலகா (74), கேப்டன் திரிமன்னே (59) ஆகியோரின் அரைசதத்தால் 187 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் மொகமது ஷமி 2 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், அபிநவ் முகுந்த் ஆகியோர் களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் தான் சந்தித்த முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த புஜாரா 12 ரன்னில் வெளியேறினார்.

ஆனால் லோகேஷ் ராகுல் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 58 பந்தில் 54 ரன்கள் சேர்த்தார். அடுத்து விராட் கோலியும், ரகானேவும் களம் இறங்கினார்கள். இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 30 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்துள்ளது.
Tags:    

Similar News