செய்திகள்

ஐ.சி.சி. தொடர்: 7-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடி யுவராஜ் சிங் சாதனை

Published On 2017-06-18 11:45 GMT   |   Update On 2017-06-18 11:46 GMT
இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங் ஐ.சி.சி. நடத்தும் தொடரில் 7-வது முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். கடந்த 17 வருடங்களாக கிரிக்கெட் விளையாடி வரும் இவருக்கு, கடந்த வங்காள தேசத்திற்கு எதிரான போட்டி 300-வது போட்டியாகும். இதன்மூலம் இந்தியா சார்பில் 300 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 5-வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தார்.

இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலம் ஐ.சி.சி. நடத்தும் தொடரின் இறுதிப் போட்டியில் 7-வது முறையாக பங்கேற்று உலக சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன் சங்ககரா, ஜெயவர்தனே, முரளீதரன் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 6 இறுதிப் போட்டியில் விளையாடியிருந்தனர். தற்போது அதை யுவராஜ் சிங் முறியடித்துள்ளார்.

யுவராஜ் சிங் பங்கேற்றுள்ள இறுதிப் போட்டிகள் விவரம்:-

1. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2000- நியூசிலாந்துக்கு எதிராக
2. ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2002 - இலங்கைக்கு எதிராக
3. ஐ.சி.சி. உலகக்கோப்பை 2003 - ஆஸ்திரேலியாவிற்கு எதிராக
4. ஐ,சி.சி. டி20 உலகக்கோப்பை 2007- பாகிஸ்தானுக்கு எதிராக
5. ஐ.சி.சி. உலகக்கோப்பை 20111- இலங்கைக்கு எதிராக
6. ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை - இலங்கைக்கு எதிராக
7. தற்போது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி- பாகிஸ்தானுக்கு எதிராக
Tags:    

Similar News