செய்திகள்

7 போட்டியில் மூன்றில் ஆட்ட நாயகன் விருது பெற்று அசத்திய நாதன் கவுல்டர்-நைல்

Published On 2017-05-18 13:10 GMT   |   Update On 2017-05-18 13:10 GMT
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் ஏழு போட்டிகளில் மூன்றில் ஆட்ட நாயகன் விருது பெற்றி அசத்தியுள்ளார்.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் முன்னணி பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வில்லியசம்ன், விஜய் சங்கர் மற்றும் ஜோர்டான் ஆகிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன் மூலம் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இந்த தொடரில் கொல்கத்தா அணி 15 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 7 போட்டிகளில் மட்டுமே கவுல்டர்-நைல் இடம்பிடித்தார். இந்த 7 போட்டிகளில் மூன்று முறை கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றுள்ளார்.

இதற்கு முன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியின்போது முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 131 ரன்கள் எடுப்பதற்குள் ஆல்அவுட் ஆனது. பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் அணி களம் இறங்கியது. அந்த அணி 49 ரன்னில் சுருண்டது. இந்த போட்டியில் நாதன் கவுல்டர்-நைல் 3 ஓவர்கள் வீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து கோலி, டி வில்லியர்ஸ் மற்றும் கேதர் ஜாதவ் ஆகிய விக்கெட்டுக்களை வீ்ழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

டெல்லி டேர்டெவிஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 168 ரன்கள் சேர்த்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா அணி 19.5 ஒவரில் 196 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 4 ஓவர்களில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இதன்மூலம் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
Tags:    

Similar News