செய்திகள்

ஐ.பி.எல்.: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக குஜராத் லயன்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

Published On 2017-04-27 14:22 GMT   |   Update On 2017-04-27 14:22 GMT
பெங்களூருவில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிராக குஜராத் லயன்ஸ் அணி கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் லயன்ஸ் அணிகள் மோதும் இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி பெங்களூருவில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் ரெய்னா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளார்.

பெங்களூரு அணியில் தைமல் மில்ஸ், ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டுள்ளனர். அனிகெட் சவுத்ரி சேர்க்கப்பட்டுள்ளார். குஜராத் அணியில் பால்க்னெர் நீக்கப்பட்டு வெயின் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

1. கெய்ல், 2. விராட் கோலி, 3. மந்தீப் சிங், 4. டி வில்லியர்ஸ், 5. டிராவிஸ் ஹெட், 6. கேதர் ஜாதவ், 7. நெஹி, 8. பத்ரி, 9. அரவிந்த், 10. சாஹல், 11. அனிகெட் சவுத்ரி.

குஜராத் லயன்ஸ்:-

1. மெக்கல்லம், 2. ஆரோன் பிஞ்ச், 3. ரெய்னா, 4. தினேஷ் கார்த்திக், 5. இஷான் கிஷான், 6. ஜடேஜா, 7. பால்க்னெர், 8. டை, 9. நது சிங், 10. பாசில் தம்பி, 11. அங்கீத் சோனி

Similar News