செய்திகள்

சென்னையில் கூடைப்பந்து பயிற்சி முகாம்

Published On 2017-04-27 04:15 GMT   |   Update On 2017-04-27 04:15 GMT
சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி திடலில் மே 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை :

சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில் கோடைகால கூடைப்பந்து பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி திடலில் மே 1-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது.

தினசரி மாலை 4 முதல் 6.30 மணி வரை பயிற்சி நடைபெறும். 10 முதல் 18 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தகுதி படைத்தவர்கள் என்று சென்னை மாவட்ட கூடைப்பந்து சங்க செயலாளர் எஸ்.எஸ்.நிசார் தெரிவித்துள்ளார்.

Similar News