செய்திகள்

விஜய் ஹசாரே கிரிக்கெட்: பெங்கால் அணியுடன் தமிழகம் இன்று மோதல்

Published On 2017-03-20 03:54 GMT   |   Update On 2017-03-20 03:54 GMT
தமிழகம் - பெங்கால் அணியும் மோதும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது.
புதுடெல்லி :

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் விஜய் சங்கர் தலைமையிலான தமிழக அணியும், மனோஜ் திவாரி தலைமையிலான பெங்கால் அணியும் மோதுகின்றன.



5-வது முறையாக பட்டம் வெல்லும் குறியுடன் தமிழக வீரர்கள் தங்களை தயார்படுத்தியுள்ளனர். அதே சமயம் பெங்கால் அணி ஏற்கனவே 5 முறை இறுதி ஆட்டத்திற்கு வந்து அதில் 4-ல் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

Similar News