செய்திகள்

விஜய் ஹசாரே தொடர்: திவாரி, இசாங்க் ஜக்கி சதத்தால் டோனி அணி அசத்தல் வெற்றி

Published On 2017-02-28 14:04 GMT   |   Update On 2017-02-28 14:04 GMT
விஜய் ஹசாரே தொடரில் சவுரப் திவாரி, இசாங்க் ஜக்கி ஆகியோரின் அபார சதத்தால் டோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மாநில அணிகளுக்கு இடையிலான விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஒரு லீக்கில் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஜார்க்கண்ட்- சர்வீசஸ் அணிகள் மேற்கு வங்காளம் கல்யாணியில் உள்ள பெங்கால் கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் மோதின.

டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி சர்வீசஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் கோசர் (58), வர்மா (48) சிறப்பான தோடக்கம் கொடுத்தனர். அதன்பின் வந்த ஷாம்செர் யாதவ் அவுட்டாகாமல் 54 ரன்னும், ராகுல் சிங் 40 ரன்னும் எடுக்க சர்வீசஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் சேர்த்தது.



பின்னர் 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அந்த அணியின் ஆனந்த் சிங், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆனந்த் சிங் 3 ரன்கள் எடுத்த நிலையிலும், இஷான் கிஷன் 33 ரன்னுடனும் ஆட்டம் இழந்தனர். ஆடுத்த வந்த விராட் சிங் 20 ரன்னில் வெளியேறினார்.



ஜார்க்கண்ட் அணி 65 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு சவுரப் திவாரியுடன், இஷாங்க் ஜக்கி ஜோடி சேர்ந்தார். இவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்ததுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். திவாரி 102 ரன்னுடனும், ஜக்கி 116 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருக்க ஜார்கண்ட் அணி 46.2 ஓவரில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 279 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Similar News