செய்திகள்

உலகக் கோப்பை வென்ற பார்வையற்றோர் கிரிக்கெட் அணியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2017-02-28 08:46 GMT   |   Update On 2017-02-28 08:46 GMT
பிரதமர் நரேந்திர மோடியை பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் சந்தித்தனர்.
புதுடெல்லி:

பார்வையற்றவர்களுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் இந்தியாவில் நடைபெற்றது. இந்த உலக கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து, வங்க தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் விளையாடியது.

இதில் இந்திய அணி அபாரமாக விளையாடி 2017-ம் ஆண்டிற்கான உலக கோப்பையை வென்று அசத்தியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் சந்தித்தனர். வீரர்களுடன் அணியை சேர்ந்த அனைவரும் உடன் இருந்தனர்.



இந்த சந்திப்பின் போது அணி வீரர்கள் பிரதமர் மோடிக்கு கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட், ஒரு பந்து, மற்றும் அணியின் ஜெர்ஸி ஆகியவற்றை வழங்கினர். மோடி அந்த பேட் மற்றும் பந்தில் கையெழுத்திட்டார்.

Similar News