செய்திகள்
தெற்கு ரெயில்வே-சென்னை யுனைடெட் எப்.சி. அணிகள் மோதிய ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி.

சீனியர் டிவிசன் லீக் கால்பந்து: தொடக்க ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே வெற்றி

Published On 2017-02-28 04:21 GMT   |   Update On 2017-02-28 04:21 GMT
நேரு ஸ்டேடியத்தில் தொடங்கிய சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை யுனைடெட் எப்.சி. அணியை தோற்கடித்தது.
சென்னை :

சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் செயின்ட் ஜோசப்ஸ் ஆதரவுடன் சீனியர் டிவிசன் லீக் கால்பந்து போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் தெற்கு ரெயில்வே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை யுனைடெட் எப்.சி. அணியை தோற்கடித்தது. தெற்கு ரெயில்வே அணி தரப்பில் ஸ்வராஜ் 38-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.



மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தியது. இந்தியன் வங்கி அணியில் லாலன் சங்கா 49-வது நிமிடத்திலும், ஒலட்சோ ஜோசப் 59-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் சென்னை சிட்டி எப்.சி.-ஏ.ஜி.அலுவலகம் (பிற்பகல் 3 மணி), சென்னை எப்.சி.-ஐ.சி.எப் (மாலை 5 மணி) அணிகள் மோதுகின்றன.

Similar News