செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா 271 ரன் குவிப்பு

Published On 2017-02-25 08:52 GMT   |   Update On 2017-02-25 10:38 GMT
வெலிங்டனில் இன்று தொடங்கிய நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 271 ரன்கள் எடுத்துள்ளது.


தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. 5 ஒருநாள் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவும், 2-வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன.


3-வது போட்டி வெலிங்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. அந்த நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 85 ரன்னும், குயின்டன் டிகாக் 68 ரன்னும் எடுத்தனர்.

272 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. அந்த அணி மிகுந்த நம்பிக்கை உடன் ரன் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.

Similar News