செய்திகள்

அனுஷ்கா ஷர்மாவுக்கு விராட் கோலியின் காதலர் தின வாழ்த்து

Published On 2017-02-15 11:01 GMT   |   Update On 2017-02-15 11:01 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது காதலி அனுஷ்கா ஷர்மாவுக்கு, காதல் கொஞ்சும் வகையில் காதலர் தின வாழ்த்துக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது இருப்பவர் விராட் கோலி. அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போன இவர், பாலிவுட் நட்சத்திரம் அனுஷ்கா ஷர்மாவுடன் சில ஆண்டுகளாக காதலில் உள்ளார். இந்த காதல் ஜோடி அவ்வப்போது வெளியில் சுற்றி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில், உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் காதலியான அனுஷ்கா ஷர்மாவுக்கு, காதலர் தின வாழ்த்துச் செய்தியை பதிவு செய்துள்ளார். அதில் அவர், “நீ என்னுடன் இருந்தால், தினமும் காதலர் தினமே, எல்லா நாட்களையும் ஒன்று போல மாற்றி விடுகிறாய்” என பதிவு செய்து, இருவரும் ஜோடியாக உள்ள படத்தையும் பதிவு செய்துள்ளார்.

விராட்கோலியின் இந்த வாழ்த்துச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

Similar News