செய்திகள்

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 8-வது வெற்றி

Published On 2017-02-09 03:26 GMT   |   Update On 2017-02-09 03:26 GMT
இந்தியாவில் நடந்து வரும் பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது.
விஜயவாடா :

பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் விஜயவாடாவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் அரை இறுதிக்கு தகுதி பெற்று விட்ட இந்திய அணி, நேபாளத்தை சந்தித்தது. முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. அஜய்குமார் 109 ரன்னும், துர்காராவ் 53 ரன்னும், வெங்கடேஸ்வரராவ் ஆட்டம் இழக்காமல் 82 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய நேபாள அணி, இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளித்து ரன் சேர்க்க முடியாமல் திணறியது. 20 ஓவர்களில் நேபாள அணி 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது. இதனால் இந்திய அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 9-வது லீக் ஆட்டத்தில் ஆடிய இந்திய அணி பெற்ற 8-வது வெற்றி இதுவாகும்.

Similar News