செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி

Published On 2017-01-29 07:25 GMT   |   Update On 2017-01-29 07:25 GMT
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் களமிறங்கிய இந்தியாவின் சானிய மிர்ஸா மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் இறுதி போட்டியில் தோல்வி.
மெல்போர்ன்:

2017-ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான 'ஆஸ்திரேலிய ஓபன்' மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா மற்றும் குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடியுடன் அப்கெயில் ஸ்பியர்ஸ் மற்றும் ஜீவான் செபஸ்டியன் ஜோடி மோதியது.
 
இதில் 2-6 4-6 என்ற செட் கணக்கில் சானியா மிர்ஸா ஜோடி தோல்வியுற்றது. சானியா மிர்ஸாவுடன் களம் கண்ட இவான் சர்வ் செய்யும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தாததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிரென்ச் ஓபன் போட்டியிலும் சானியா மற்றும் டோடிக் ஜோடி லியாண்டர் பயஸ் மற்றும் மார்டினா ஹிங்கிஸ் ஜோடியிடம் தோல்வியுற்றனர். 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து விளையாடிய சானியா மிர்ஸா தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

Similar News