செய்திகள்

திறமையை வெளிப்படுத்தியதால் வெற்றி: மோர்கன்

Published On 2017-01-27 05:34 GMT   |   Update On 2017-01-27 05:34 GMT
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் முழு திறமையை வெளிப்படுத்தியதால் வெற்றி பெற்றோம் என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்தார்.
கான்பூர்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் 20 ஓவர் போட்டி நேற்று கான்பூரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. டோனி 36 ரன்னும், சுரேஷ் ரெய்னா 34 ரன்னும், கோலி 29 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து 18.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் மோர்கன் 51 ரன்னும், ஜோரூட் 46 ரன்னும் எடுத்து வெற்றிக்கு முந்திய பங்கு வகித்தனர்.

வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியதாவது:-

இந்திய சுற்றுப் பயணத்தில் நாங்கள் பெற்ற முழுமையான வெற்றி இதுவாகும். முழு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறோம். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். டைமல் மில்லஸ், ஜோர்டான் அணிக்கு என்ன தேவையோ அதை செய்தனர்.

சிறிய மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நன்கு நெருக்கடி கொடுத்தனர். மிடில் ஓவரில் மொயின் அலி பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. இதுதான் ஆட்டத்தின் முக்கியமானது. விராட் கோலி அவுட்தான் மிக திருப்பு முனையாக இருந்தது. சாம் பில்லிங்ஸ், ஜாஜன் ராய் நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News