செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழில் டுவீட் செய்த சேவாக்

Published On 2017-01-21 08:18 GMT   |   Update On 2017-01-21 08:18 GMT
முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழில் டுவீட் செய்திருக்கிறார்.
புது டெல்லி:

ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஐந்தாவது நாளாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை களத்தில் குதித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆரம்பித்த இப்போராட்டம் இந்தியா தாண்டி தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்தனது டுவிட்டர் பக்கத்தில்  "அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள். அன்புடன் ஜல்லிக்கட்டு'' தமிழில் டுவீட் செய்து ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக "இளைஞர்களின் போராட்டம் அறவழியில் நடந்து வருவதைப் பார்க்க அற்புதமாக உள்ளது. உங்களின் உணர்வுகளை அமைதியான வழியில் வெளிப்படுத்துங்கள். அமைதியான போராட்டம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக
இருக்கட்டும்" என்று சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News