செய்திகள்

ஐ.சி.சி. தரவரிசை: ஸ்டெயினை முந்தினார் ரபாடா; அம்லாவிற்கு 6-வது இடம்

Published On 2017-01-18 11:07 GMT   |   Update On 2017-01-18 11:07 GMT
டெஸ்ட் போட்டி பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதன்முறையான ஸ்டெயினை முந்தியுள்ளார் ரபாடா. பேட்ஸ்மேன் தரவரிசையில் அம்லா 6-வது இடத்திற்கு முன்னேறினார்.
இலங்கை அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அம்லா 134 ரன்கள் குவித்தார். அதேபோல் ரபாடா 94 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விகெட்டுக்கள் சாய்த்தார்.

இதன்மூலம் ரபாடா 3 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த அணியின் ஸ்டெயின் 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார். ஸ்டெயின் நீண்ட காலம் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார். அவர் தொடர்ந்து விளையாடும் வரை அவரை யாராலும் எட்டி பிடிக்க முடியாமல் இருந்தது. தற்போது காயம் காரணமாக ஸ்டெயின் ஓய்வில் இருக்கிறார். இதனால் அவர் 6-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளார்.

தென்ஆப்பிரிக்காவின் இளம் வீரராக ரபாடா முதன்முறையாக டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஸ்டெயினை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அதேபோல் பேட்ஸ்மேன் தவரிசையில முன்னணியில் இருந்த அம்லா தொடர்ந்து மோசமாக விளையாடியதன் காரணமாக 10-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருந்தார். தற்போது சதம் அடித்ததால் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Similar News