செய்திகள்

ரஞ்சி டிராபி இறுதி போட்டியில் நுழைந்தது குஜராத் அணி

Published On 2017-01-04 22:00 GMT   |   Update On 2017-01-04 22:00 GMT
ரஞ்சி டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் குஜராத் வெற்றி பெற்றதை தொடர்ந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மும்பை:

ரஞ்சி டிராபியின் 2-வது அரையிறுதிப் போட்டி நாக்பூரில் ஜனவரி ஒன்றாம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த குஜராத் அணி முதல் இன்னிங்சில் 390 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய ஜார்க்கண்ட் அணி 408 ரன்கள் குவித்தது.

தனது இரண்டாவது இன்னிங்சில் குஜராத் அணி 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இருப்பினும் ஜார்க்கண் அணியை 111 ரன்களுக்குள் குஜராத் அணி ஆட்டமிழக்க செய்தது.

இதன் மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதனிடையே, தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபியின் 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணி வெற்றி பெற 251 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி குஜராத் அணியுடன் மோதும்.

Similar News