செய்திகள்

லோதா கமிட்டி பரிந்துரை மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

Published On 2016-12-04 07:38 GMT   |   Update On 2016-12-04 07:38 GMT
லோதா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரை மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை நடைபெறுகிறது.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் வாரியத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து லோதா கமிட்டி சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை செய்தது. ஆனால் சில பரிந்துரைகளை அமல்படுத்த கிரிக்கெட் வாரியம் மறுத்து வருகிறது.

இதையடுத்து லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாத கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளை நீக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் லோதா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்தது.

இதுபற்றி கிரிக்கெட் பொதுக்குழுவில் ஆலோசிக்கப்பட்டது. இதில் கிரிக்கெட் வாரிய நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை நாளை சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதில் கிரிக்கெட் வாரியம் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.

இதனால் நாளை சுப்ரீம் கோர்ட்டு என்ன மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கும் என்று நிர்வாகிகள் எதிர் நோக்கி உள்ளனர்.

Similar News