செய்திகள்

6-வது முறையாக சர்வதேச தடகள விருது பெற்ற உசைன் போல்ட்

Published On 2016-12-03 15:02 GMT   |   Update On 2016-12-03 15:02 GMT
சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கத்தின் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரருக்கான விருதை உசைன் போல்ட் பெற்றுள்ளார். இதன் மூலம் 6-வது முறையாக இவ்விருதினைப் பெற்றுள்ளார்.
உலகின் தலைசிறந்த ஓட்டப்பந்தய வீரர் என்ற பெயரை பெற்றிருக்கும் உசைன் போல்ட், மூன்று ஒலிம்பிக் தொடரில் 100மீட்டர், 200மீட்டர் மற்றும் 4X100மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தவர்.

இவருடன் பிரேசில் வீரர் தியாகோ பிராஸ், அமெரிக்காவின் ஆஷ்டன் ஈட்டன், பிரிட்டனின் மோ பராஹ், கென்யாவின் கிப்ருடோ உள்ளிட்ட முன்னணி தடகள வீரர்கள் ஆடவர்களுக்கான சர்வதேச விருதுக்கான போட்டியில் இருந்தனர். இருந்தாலும் உசைன் போல்ட் வெற்றி பெற்றார். மொனாக்கோவில் உள்ள சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் உசைன் போல்டுக்கு சிறந்த தடகள வீரருக்கான விருது வழங்கப்பட்டது.

பெண்களுக்கான விருதுக்கு 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சாதனைப் படைத்த அல்மாஸ் அயானா சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Similar News