செய்திகள்

ஆக்கி: ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி

Published On 2016-12-01 03:40 GMT   |   Update On 2016-12-01 03:40 GMT
ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது.
இந்திய ஆண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று அந்த நாட்டு அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் 2-வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் விக்டோரியாவில் நேற்று மீண்டும் சந்தித்தன.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. 53-வது நிமிடம் வரை சமநிலை நீடித்த நிலையில் அதன் பிறகு ஜெரிமி ஹாய்வார்ட் கோல் போட்டு ஆஸ்திரேலியாவுக்கு வெற்றியை தேடித்தந்தார்.

இந்திய தரப்பில் ஆகாஷ் தீப்சிங், ரகுநாத்(2 கோல்) ஆகியோர் அடித்த கோலுக்கு பலன் இல்லாமல் போய் விட்டது. இதையடுத்து இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

Similar News