செய்திகள்

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: டோனிக்கு காத்திருக்கும் சவால்

Published On 2016-10-28 07:31 GMT   |   Update On 2016-10-28 07:31 GMT
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் டோனிக்கு காத்திருக்கும் சவால் என்ன என்பதை கீழே பார்ப்போம்


வீராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை (3-0) முழுமையாக கைப்பற்றி தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தியது.

இதனால் ஒரு நாள் போட்டி கேப்டனான டோனிக்கு ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஆனால் தற்போது ஒரு நாள் போட்டி 2-2 என்ற சமநிலையில் உள்ளது. நாளைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்வது டோனிக்கு மிக முக்கியம். ஒரு வேளை தொடரை இழந்தால் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாவார்.

வங்காளதேசத்துக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரை இழந்த போது டோனியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பேச்சு எழுந்தது. இது போன்ற விமர்சனம் மீண்டும் வராமல் இருக்க டோனி சாதிக்க வேண்டியது அவசியம். இதனால் அவருக்கு கடும் சவால் காத்து இருக்கிறது.

Similar News