செய்திகள்

டெல்லி ஒருநாள் கிரிக்கெட்: கேன் வில்லியம்சன் சதம்

Published On 2016-10-20 10:45 GMT   |   Update On 2016-10-20 10:45 GMT
டெல்லியில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் சதம் அடித்தார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி லாதம், கப்தில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கப்தில் ரன்ஏதும் எடுக்காமல் உமேஷ் யாதவ் பந்தில் டக்அவுட் ஆனார்.

அடுத்து கேப்டன் கேன் வில்லியம்சன் களம் இறங்கினார். இவர் லாதம் உடன் இணைந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. லாதம் 46 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

மறுமுனையில் விளையாடிய வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 109 பந்தில் 13 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்தார். நியூசிலாந்து அணி 36 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. ஆண்டர்சன் 9 ரன்னுடனும், வில்லியம்சன் 101 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Similar News