செய்திகள்

தமிழக ரஞ்சி அணி அறிவிப்பு

Published On 2016-10-01 03:15 GMT   |   Update On 2016-10-01 03:15 GMT
ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை மற்றும் ரெயில்வே அணிகளுக்கு எதிராக விளையாடும் தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சென்னை :

இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை மற்றும் ரெயில்வே அணிகளுக்கு எதிராக விளையாடும் தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அபினவ் முகுந்த் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அணி விவரம் வருமாறு:- அபினவ் முகுந்த் (கேப்டன்), பாபா அபராஜித் (துணை கேப்டன்), பாபா இந்த்ராஜித், வாஷிங்டன் சுந்தர், ஜெகதீசன், தினேஷ் கார்த்திக், கோசிக், சூர்யபிரகாஷ், ரஹில் ஷா, ரங்கராஜன், அவ்ஷிக் ஸ்ரீனிவாஸ், அஸ்வின் கிறிஸ்ட், முகமது, கே.விக்னேஷ், டி.நடராஜன், கவுசிக் காந்தி, விசுவநாதன். 

Similar News