செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே பிரசாத் நியமனம்

Published On 2016-09-21 07:57 GMT   |   Update On 2016-09-21 08:12 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.கே பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 87-வது பொதுக்குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்.எம்.லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து முக்கியமாக ஆலோசனை செய்யப்பட்டதாக தெரிகிறது.

இடைக்காலமாக நியமனம் செய்யப்பட்ட செயலாளர் அஜய்ஷிர்கே, இந்த கூட்டத்தின்போது மீண்டும் முறைப்படி செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.  

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே பிரசாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான எம்.எஸ்.கே பிரசாத் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவர். சரன்தீப்சிங் (வடக்கு மண்டலம்), அபே குருவில்லா(மேற்கு மண்டலம்) சுப்ரோதோ பானர்ஜி(கிழக்கு மண்டலம்) ராஜேஷ் சவுகான்(மத்திய மண்டலம்) ஆகியோர் தேர்வுக்குழு உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

Similar News