செய்திகள்

காயத்தால் அவதிப்படும் கவுல்டர்-நைல் இலங்கை தொடரில் இருந்து விலகல்

Published On 2016-08-25 10:37 GMT   |   Update On 2016-08-25 10:37 GMT
காயம் காரணமாக இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் இருந்து கவுல்ட்டர்-நைல் நீக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டியில் இடம்பெறாத மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் கவுல்ட்டர் நைல் இலங்கை தொடருக்கான அந்த அணியில் இடம்பிடித்துள்ளார். ஆனால், மூன்று டெஸ்ட் மற்றும் இதுவரை முடிந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிக்கான ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.

தற்போது அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கான ஆஸ்திரேலியா அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் 13 பேர் கொண்ட அணியில் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில், ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் மற்றும் பேட்ஸ்மேன் கிறிஸ் லைன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் மேக்ஸ்வெல் இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News