செய்திகள்

பெண்கள் ஆக்கி: இந்திய அணியிடம் கனடா தோல்வி

Published On 2016-07-23 19:51 GMT   |   Update On 2016-07-23 19:51 GMT
பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணியிடம் கனடா தோல்வி அடைந்தது.
மான்ஹிம்:

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதற்காக இந்திய பெண்கள் ஆக்கி அணி, அமெரிக்காவை அடுத்து கனடாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இந்தியா-கனடா அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது ஆக்கி போட்டி மான்ஹிம் நகரில் நடந்தது. இதில் இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் கனடாவை எளிதில் தோற்கடித்தது.

இந்திய அணி தரப்பில் வந்தனா கதாரியா 9-வது, 51-வது நிமிடத்திலும், தீபிகா 38-வது, 49-வது நிமிடத்திலும், பூனம் ராணி 58-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

கனடா அணி தரப்பில் ஸ்டீபானி நார்லான்டெர் 17-வது நிமிடத்திலும், பிரின்னெ ஸ்டார்ஸ் 42-வது நிமிடத்திலும் பதில் கோல் திருப்பினார்கள்.

Similar News