செய்திகள்

அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர வீரரான மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு

Published On 2016-06-27 06:33 GMT   |   Update On 2016-06-27 06:33 GMT
உலகின் சிறந்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்சி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகின் சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

கிளப் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார். தனது நாட்டு அணிக்காக ஆடும்போது அவரால் சிறந்த வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. 2014-ம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் அவர் சாம்பியன் பட்டம் பெற்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோற்று அர்ஜென்டினா கோப்பையை இழந்தது.

தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு கோபா அமெரிக்க கோப்பையை அர்ஜென்டினாவுக்கு பெற்று கொடுப்பார் என்று அவர் மீது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதிப் போட்டியில் தோற்று ஏமாற்றம் அடைய வைத்தது. பெனால்டி ஷுட் அவுட்டில் வாய்ப்பை தவறவிட்டு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் கொடுத்தார். இதன்மூலம் மெஸ்சி கனவு கலைந்தது.

இதற்கிடையே சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்சி அறிவித்துள்ளார். நான்கு இறுதி சுற்றுக்குள் நுழைந்தும் ஒருமுறை கூட சாம்பியன் ஆக முடியாதது வேதனை அளிக்கிறது. என்னை பொறுத்தவரை அர்ஜென்டினாவின் தேசிய அணி என்பது இத்துடன் முடிந்துவிட்டது என தனது ஓய்வு அறிவிப்பின் போது மெஸ்சி தெரிவித்தார்.

இனி அவர் அர்ஜென்டினா அணிக்காக விளையாடமாட்டார். இதனால் 2018 உலக கேகப்பையில் அவரை காணஇயலாது. கிளப் அணிக்காக மட்டுமே விளையாடுவார்.

Similar News